'எனக்கு தெரிஞ்சத ட்ரை பண்றேன்'...அதுக்காக இப்படியா செய்வீங்க!மைதானத்தில் ஹிட்மேன் செய்த செயல்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 24, 2019 07:21 PM

நியூசிலாந்து அணி வீரரான ட்ரண்ட் போல்டின் விநோதமான ஷாட்களை பார்த்த இந்திய வீரர் ரோஹித் ஷர்மா,மைதானத்தில் சிரித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

Rohit Sharma In Splits After Trent Boult\'s Bizarre Defensive Shot

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில்,8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வியினை தழுவியது.இந்நிலையில் ஆட்டத்தின் 36வது ஓவரை சஹால் வீசினர்.அப்போது நியூசிலாந்து வீரர்  ட்ரண்ட் போல்ட் வினோதமான முறையில் பந்தினை தடுத்து ஆடினார்.அப்போது இந்திய வீரர் ரோஹித் ஷர்மா தனது சிரிப்பினை அடக்க முடியாமல் குபீரென சிரித்தார்.கண்ட மற்ற வீரர்களும் சிரித்தார்கள்.தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்த போட்டியானது வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது.இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Tags : #CRICKET #MSDHONI #ROHIT SHARMA #TRENT BOULT #NEW ZEALAND