‘தவான் செய்த வேலை.. கடுப்பாகி முறைக்கும் பாண்ட்யா’.. வைரலான வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 28, 2019 07:41 PM

நியூஸிலாந்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தவான் செய்த செயலால் கடுப்பாகிய பாண்ட்யாவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Pandya loses his cool after Dhawan\'s overthrow giving NewZealand a run

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அபாரமான வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மவுன்ட் மாங்கனுயில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய நியூஸிலாந்து அணி 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனையடுத்து  244 என்கிற இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இந்திய அணி 43 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. நியூஸிலாந்திற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் வென்றதைத் தொடர்ந்து தொடரைக் கைப்பற்றி புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

நியூஸிலாந்திற்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டியிலிருந்து தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 

இப்போட்டியில் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 14 -ஆவது ஓவரில் 2 -ஆவது பந்தை  வீசினார். அந்த பந்தை நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் எதிர் கொண்டு அதை மிட் விக்கெட்டுக்கு தூக்கி அடித்தார். உடனே பந்தை எடுத்த ஷிகர் தவான் ஸ்டெம்புக்கு வீசாமல் தூரமாக வீசிவிட்டார். இந்த ஓவர்த்ரோவினால் தேவையில்லாமல் ஒரு ரன் அதிகமானது. இதனால் கடுப்பான பாண்ட்யா, தவானை முறைத்துப் பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags : #PANDYA #DHAWAN #NZVIND #ODI #ICC #BCCI