‘இவரின் சேவை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தேவை ’.. வலியுறுத்தும் இந்திய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 24, 2019 07:42 PM

வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் கண்டிப்பாக விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.

Ashwin should be considered for world cup 2019 says indian cricketer

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பிர், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த  2007-ல் நடந்த டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தவர். இந்திய அணியில் விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி குறித்த கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார்.

தற்போது இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அதிக போட்டிகளில் விளையாட முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் மற்றும் சஹால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜடேஜாவுக்கு இடம் கிடைத்திருந்தது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கவுதம் கம்பிர், ‘கடந்த ஒரு வருடமாக குல்தீப் மற்றும் சஹால் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் உலகக்கோப்பை நடைபெற இருக்கிற இங்கிலாந்து மைதானங்கள் தட்டையானதாக இருக்கும். அதில் அஸ்வின் போன்ற அனுபவமிக்க வீரர் இருப்பது அவசியம்’ என பேசியுள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத வீரர்கள் முதல்தரப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் குறிப்பாக தோனி, தவான், அம்பட்டி ராயுடு போன்ற வீரர்கள் விளையாட வேண்டும் என்றும் கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.

Tags : #ASHWIN #GAMBHIR #ICC #TEAMINDIA