‘ஏய்.. கருப்பு பயலே’.. கிரவுண்டில் நிறவெறி தூண்டும்படி பேசி சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 23, 2019 06:20 PM

தென்னாப்ரிக்க வீரரை, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹமது நிறவெறித் தூண்டுதலை ஏற்படுத்தும் விதமாக இழிவுபடுத்தி பேசியுள்ள சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு உலகம் முழுவதும் பெரும் கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது.

Here\'s what Sarfraz was heard saying to Phehlukwayo in ODI-controversy

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான வெவ்வேறு தொடர்களில் விளையாடி வரும் நிலையில் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்ரிக்க அணி, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் செவ்வாய் கிழமை டர்பனில் நிகழ்ந்த 2-வது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாவ்யோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 69 ரன்கள் ஸ்கோர் செய்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 37-வது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த அவரிடம் பாகிஸ்தான் அணியின் கேப்டனும், அங்கு விக்கெட் கீப்பராக நின்றுகொண்டிருந்தவருமான சர்ஃப்ரஸ் அஹமது எதையோ கூறியுள்ளார்.

அந்த சமயம் மேட்சை கமண்ட்ரி செய்துகொண்டிருந்த ரமீஸ் ராஜாவிடம், சர்ஃப்ரஸ் பேசியதை மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொல்லி கேட்கப்பட்டபோது, அவரோ, சர்ஃப்ரஸ் பேசியதை நீண்ட வாக்கியம் என்றும் அதனை மொழிபெயர்ப்பது சிரமமான ஒன்று என்றும் பேசியுள்ளார்.  ஆனால் ஸ்டம்ப்பில் இருந்த மைக்கில் சர்ஃப்ரஸ் பேசியது தெளிவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, ஏய் கருப்பு பயலே, இன்றைக்கு உனது தாய் எங்கே உட்க்காந்திருக்கிறாள், அவரிடம் உனக்காக வேண்டிக்கொள்ளச் சொன்னாயா? என்ன வேண்டிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாய்? என்று சர்ஃப்ரஸ் பேசியுள்ளது அந்த மைக்கின் மூலம் வெளிவந்தது. உலக அளவில் யாராக இருந்தாலும் நிறவெறியினை தூண்டும்படி பேசுவது குற்றம் என்கிறபொழுது, கிரிக்கெட்டில் இப்படி பேசுவதென்பது முற்றிலும் தடை செய்யப்பட்ட நடத்தையாக பார்க்கப்படுகிறது. இதனால் சர்ஃப்ரஸ் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்!

Tags : #RACIST #SAVPAK #CONTROVERSY #SARFARAZAHMED #ICC #SAYNOTORACISM