'இப்படி கூட வரவேற்பு கொடுக்கலாம்'...இந்திய அணியை மிரள வைத்த நியூசி.பழங்குடி மக்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 26, 2019 03:15 PM

இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக வந்த இந்திய கிரிக்கெட் அணியினருக்கு,நியூசிலாந்து நாட்டு பழங்குடி மக்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது.

Team India Receive Traditional Welcome From Maori Community

நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.முதல் ஒரு நாள் போட்டியானது நேப்பியா் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியினை பெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி,இன்று காலை ஓவல் மைதானத்தில் தொடக்கி நடைபெற்று வருகிறது.இதற்காக இந்திய அணி நேற்று ஓவல் மைதானத்திற்கு சென்றது.அப்போது நியூசிலாந்து பழங்குடி மக்கள் தங்களின் பாரம்பரிய முறைப்படி நடனமாடி இந்திய வீரர்களை வரவேற்றனர்.இதனை கண்ட இந்திய வீரர்கள் நியூசிலாந்து பழங்குடி மக்களின் அன்பில் நெகிழ்ந்து போனார்கள்.இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags : #BCCI #VIRATKOHLI #TEAM INDIA #TRADITIONAL WELCOME #MAORI COMMUNITY