'என்கிட்ட ஒரண்ட இழுக்கனும்னே வருவீங்களா'?...ட்விட்டரில் கோலியை ட்ரோல் செஞ்ச வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 26, 2019 01:40 PM

கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படத்தை,கெவின் பீட்டர்சன் ட்ரோல் செய்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

Virat Kohli, Kevin Pietersen Involved In Hilarious Twitter Exchange

கோலி, தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் 'வெயிலில் குளிர்காய்கிறேன்' என்ற கேப்ஷனோடு பதிவிட்டிருந்தார்.அதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரரான பீட்டர்சன் "நீங்கள் அதிகமாக நிழலில் இருக்கிறீர்கள்" என்று கிண்டலாக பதிலளித்திருந்தார்.அதற்கு பதிலளித்த கோலி ''உங்களின் முதல் பதிவு அதைவிட மோசமானது" என்று முந்தைய பதிவை மேற்கோள்காட்டி பதிவிட்டிருந்தார்.

ட்விட்டரில் வீரர்கள் போடும் பதிவு மற்றும் புகைப்படங்களை ட்ரோல் செய்யும் பழக்கத்தை வாடிக்கையாக வைத்திருக்கும் கெவின் பீட்டர்சன்,தற்போது கோலியை வம்பிழுத்து வருகிறார்.இதற்கு முன்பு பியர்ஸ் மார்கன் மற்றும் ப்ளிண்டாப்பை ட்விட்டரில் வம்பிழுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIRATKOHLI #TWITTER #KEVIN PIETERSEN