'விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்'...நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்...யூசுப் பதான் ட்விட்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 09, 2019 10:56 PM

விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பெற்று வருகிறார்.அவர் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் என  யூசுப் பதான் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

Former India Batsman Jacob Martin Hospitalized After Accident

குஜராத் மாநிலம், பரோடாவை (தற்போது வதோதரா) சேர்ந்தவர் ஜேக்கப் மார்ட்டின்.இவர் 1999 - 2001-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், 138 போட்டிகளில் விளையாடி 9,192 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 46.65.இவர் சிறந்த முதல் தர வீரராகும்.

 

46 வயதான இவர்,ஒரு வாரத்திற்கு முன்புதான் விபத்தில் சிக்கியுள்ளார்.யூசுப் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் குறித்து தெரிவித்த பின்பு தான் பலருக்கும்,ஜேக்கப் மார்ட்டின் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.கடந்த 2009-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜேக்கப்,அதன்பிறகு, 2016-17 சீசனில் பரோடா அணிக்கு பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #TWITTER #ACCIDENT #YUSUF PATHAN #JACOB MARTIN