சார்...''அவ என்னோட இதயத்தை திருடிட்டு போய்ட்டா''...இளைஞரின் புகாரால் அதிர்ந்த காவல்துறையினர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 09, 2019 10:20 PM

என்னுடைய இதயத்தை திருடி விட்டாள்,அதனை மீட்டு கொடுங்கள் என இளைஞர் அளித்த  புகாரால்,காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

She stole my heart Nagpur man approach police this theft complaint

நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது இதயத்தை பெண் ஒருவர் திருடிவிட்டாள் எனவும், திருடப்பட்ட தனது இதயத்தை மீண்டும் மீட்டு கொடுக்க வேண்டும்,என காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

பல்வேறு குற்ற வழக்குகளை கையாண்ட காவல்துறையினருக்கு,இதயத்தை காணவில்லை என்ற புகார் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும்,புகார் கொடுக்க வந்த இளைஞருக்கு சில அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.மேலும் இது போன்ற புகார்களை பெறுவதற்கு சட்டத்தில் இடமில்லை,என்பதனை போலீசார் அந்த இளைஞருக்கு விளக்கி கூறினார்கள்.

 

சமீபத்தில் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த,நாக்பூர் நகர காவல் ஆணையர் இது போன்ற விசித்திரமான புகார்களை நிச்சயம் தீர்க்க முடியாது என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

Tags : #POLICE #NAGPUR #POLICE COMMISSIONER