ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் - மனைவி.. திருப்பூரில் பரபரப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 09, 2019 01:40 PM

திருப்பூரில் கணவன் - மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu - Husband and wife commits suicide by hanging themselves

திருப்பூர் அருகே பல்லடம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் திருமணமான சில நாட்களிலேயே தன் மனைவியுடன், தான் வேலை செய்யும் ஊரான திருப்பூரில் வீடு எடுத்து தங்கிக்கொண்டு பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் வெகு நேரம் ஆகியும்  முத்துகிருஷ்ணனின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது.

முதல்நாள் இரவு வீட்டுக்குள் சென்ற கணவன், மனைவி இருவரும் காலை வெகுநேரம் ஆன பின்னரும் வெளிவராததை கவனித்த அக்கம் பக்கத்தினர் ஏதோ தவறாக நடந்துள்ளது என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த காவல்துறையினர் முத்துக்கிருஷ்ணனின் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.

ஆனாலும் யாரும் கதவைத் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி கணவன், மனைவி இருவரும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்த காட்சியை போலீஸார் கண்டதுதான்.  

பின்னர்  இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், தற்கொலை குறித்த காரணங்களை விசாரித்து வருவதோடு, உண்மையில் இருவரும் தற்கொலைதான் செய்துகொண்டுள்ளார்களா அல்லது கொலையா என்றும் ஆய்வுசெய்து வருகின்றனர்.

Tags : #SUICIDE #HUSBANDANDWIFE #TIRUPUR #POLICE #AUTOPSY #INVESTIGATION