'லஞ்சமில்லாத ஆட்சி,யாருக்கும் அஞ்சாத நீதி'...தனது ஸ்டைலில் குடியரசு தின வாழ்த்து சொன்ன கேப்டன்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 26, 2019 12:33 PM

அமெரிக்காவிலிருந்து வீடியோ மூலம் குடியரசு தின வாழ்த்துகளை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Vijayakanth release video for Republic Day wishes from America

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவிற்கு சிகிக்சைக்காக சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீடியோ மூலம் தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வீடியோவில் வெளியிட்டுள்ள பதிவில் 'அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தலை மக்களோடு இணைந்து உருவாக்குவோம்.மேலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அவரது கட்சி தொண்டர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Tags : #VIJAYAKANTH #TWITTER #DMDK #REPUBLIC DAY 2019