'பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன்'...பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 26, 2019 12:00 PM

அரசுப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன், தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kanchipuram School Student Fell Down from the Bus Foot board

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்,செல்லம்பட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால்,பள்ளி மாணவர்கள் பலர் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது பொன்னேரிக்கரை அருகே சென்றபோது மாணவன் ஒருவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பதைபதைபை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே காஞ்சிபுரத்தில் இருந்து அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : #ACCIDENT #FOOT BOARD #KANCHIPURAM #SCHOOL STUDENT