‘இன்னும் ஒரு வருஷத்துல டாக்டராயிருப்பானே.. எல்லாம் போச்சே’..கலங்கி நிற்கும் குடும்பம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 18, 2019 09:28 PM

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தைச் சேர்ந்த குக்கிராமம் நக்கம்பாடி. கொஞ்சம் விவசாயம் பிழைத்துக்கொண்டிருக்கும் இந்த வானம் பார்த்த பூமியில் இருந்துதான் அறிவுச்செல்வன்(27) டாக்டருக்கு படிக்கச் சென்றார்.

Final Year medical student dead in an accident due to drunk and drive

ஆனால் இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், எதிர்பாராமல் நடந்த விபத்தில் அறிவுச் செல்வன் இறந்ததால் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பெரிய படங்கள் பொங்கல் ரிலீஸாக வெளியாகின. இந்த படங்களைப் பார்க்க எப்படியேனும் முதல் நாள் முதல் ஷோவுக்கு சென்றுவிடவேண்டும் என்கிற ஆர்வத்தில் அறிவுச்செல்வன் தன்னுடைய ஊர் நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுள்ளார். இவர்களைத் தவிர இவர்களுடனேயே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிற்றரசன் எனும் இளைஞர்.

படத்துக்குச் சென்ற இந்த நண்பர்கள் மதுஅருந்தியபடி கார் இயக்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளனர். வழியில் பெரம்பலூர்-குன்னம் இடைப்பட்ட போக்குவரத்துச் சாலையில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோரவிபத்தினால் அறிவுச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

27 வயது மதிக்கத்தக்க அறிவுச்செல்வன் பன்னிரெண்டாம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண்ணுக்கு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் இருந்ததால், அவரது தாய் தந்தையர் கஷ்டப்பட்டு லட்சக்கணக்கில் நன்கொடைகள் கொடுத்து தூத்துக்குடி தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். மருத்துவ படிப்பினை முடிக்க இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், இப்படி நிகழ்ந்துள்ளது அக்குடும்பத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #DOCTOR #MEDICALCOLLEGESTUDENT #DRUNKANDSRIVE #FDFS #YOUTH #CAR #SAD #FRIENDS #DEAD