‘2 முறை 4 விக்கெட்’ ..நியூஸி மண்ணை அலறவிட்ட வீரர்..கேப்டன் கோலி பெருமிதம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 27, 2019 02:54 PM

நியூஸிலாந்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 2 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் குல்தீப் யாதவ். மேலும் இவரின் சிறப்பான ஆட்டம் தங்களுக்கு உற்சாகம் ஊட்டிவருவதாக கேப்டன் கோலி பத்திரிகை பேட்டி ஒன்றில் தனது வாழ்த்தினை  தெரிவித்துள்ளார்.

NZvIND - Kohli praises Kuldeep for his new achievement in 2nd ODI

நியூஸிலாந்து மண்ணில் 5 ஒரு நாள் போட்டிக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியா அந்த மண்ணில் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இந்த தொடர் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இதுவரை நியூஸிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 2 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் இதுவரை இந்தியாவுக்காக 37 தொடர்களில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 45 ரன்கள் குவித்த குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் பந்து வீசி  டாம் லதாம், ஹென்றி நிக்கோலஸ், காலின் க்ராண்ட்ஹோம், இஷ் சோதி என மிக முக்கியமான நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணை செய்தார். முந்தைய ஒருநாள் தொடரைப் போல இதிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், இதுவரை நியூஸிலாந்து மண்ணில் தொடர்ந்து 2 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரைக் கைப்பற்றும் நிலையில் அதற்கான ஆயத்தப் பணியில் இந்திய அணி ஈடுபட்டு வரும் நிலையில் குல்தீப் யாதவின் சிறப்பான ஆட்டம் தங்களுக்கு உற்சாகம் ஊட்டிவருவதாக கேப்டன் கோலி பத்திரிகை பேட்டி ஒன்றில் தனது வாழ்த்தினை குல்தீப் யாதவிற்கு தெரிவித்துள்ளார்.

Tags : #KULDEEPYADAV #VIRATKOHLI #NZVIND #2NDODI