'இது என்ன மின்னல விட வேகமாக இருக்கு'...ஸ்டம்பிங்கில் தெறிக்க விட்ட தல...பட்டையை கிளப்பும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 26, 2019 04:27 PM

நியூசிலாந்திற்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் தோனி செய்த மின்னல் வேக ஸ்டம்பிங் தற்போது வைரலாகி வருகிறது.

Dhoni’s lightning fast stumping ends Ross Taylor’s innings

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலேயான 2-வது ஒரு நாள் போட்டி,ஓவல் மைதானத்தில் இன்று காலையில் தொடங்கியது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது.இந்த போட்டியின் கூடுதல் சிறப்பாக,தோனி, ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், 337-வது போட்டியில் விளையாடினார். இதன்மூலம், இந்திய அணிக்காக அதிக ஒரு நாள் போட்டிகள் விளையாடிவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை அவர் பிடித்துள்ளார்.

இந்த போட்டியில் தோனி செய்த மின்னல் வேக ஸ்டம்பிங் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.நியூசிலாந்து பேட்டிங்கின்போது, 18-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார்.அப்போது பந்தை எதிர்கொண்ட ராஸ் டெய்லர்,இறங்கி வந்து அடிக்க ஆசைப்பட்டார்.ஆனால் பந்தானது விக்கெட் கீப்பர் தோனியின் கைக்குள் செல்ல,அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார்.மேலும் அதிரடியாக விளையாடிய தோனி, 48 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Tags : #MSDHONI #CRICKET #BCCI #ROSS TAYLOR