'பெரிய இதயங்களுடன் சின்னஞ்சிறு மழலைகள்'.. பெண் குழந்தைகள் தினத்துக்கு CSK வாழ்த்து!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 24, 2019 07:45 PM

பெண் குழந்தைகள் தினத்துக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கில் சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடி மகிழும் வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, தேசிய பெண் குழந்தைகள் தினத்துக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

let\'s pledge to make them feel special, CSK on national girl child day

வருடந்தோறும் ஜனவரி 24-ஆம் தேதி இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்றைய தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்காக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் பற்றிய கருத்தரங்கமும் விழிப்புணர்வு அரங்கங்களும் நடத்தப்பட்டன.

சமூகத்தின் மிக முக்கியமான பலமாக இருக்கும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கட்டாயக் கல்வி, பாலியல் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைகளை குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு வரையிலும் தங்குதடையின்றி நிறைவேற்றும் புதிய திட்டமான தனலட்சுமி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் குழந்தைத் திருமணம், குழந்தைகள் மீது செலுத்தப்படும் வன்மம் உள்ளிட்ட மேலும் சில குற்றப் பிரிவுகள் பாக்சோ சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெண் குழந்தைகள் சிலர் எந்த கவலைகளும் இன்றி மழலைச் சிரிப்புடன் கனவுச் சிறகுகளுடன் சிரித்து ஆடிப்பாடி மகிழ்ந்துகொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, அந்த குழந்தைகள் உட்பட தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் அனைத்து பெண் குழந்தைகளுக்குமான வாழ்த்தினையும் பதிவு செய்துள்ளது.

மிக விரைவில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் தலைமையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தன் அணியில் உள்ள ‘சூப்பர் லெவன்’ என்றழைக்கப்படும் வீரர்களைக் கொண்டு களத்தில் இறங்கி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #NATIONALGIRLCHILDDAY #WHISTLEPODU #MSDHONI #ROHITSHARMA #RAINA