‘இந்திய அணியின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி?’.. மனம் திறந்த நியூஸி கேப்டன்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 25, 2019 06:56 PM

இந்திய வீரர்கள் சிறப்பாக இருப்பதாகவும், அதைவிட தங்கள் அணி வீரர்கள் சிறப்பாகவும் விளையாடியாக வேண்டும் என்றும் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

India currently in top form but NZ will never give up, williamson

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த புதன்கிழமை மெக்லீன் மைதானத்தில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூஸிலாந்து அணி, இந்திய பெளலர்களின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்கமுடியாமல் 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் தரப்பில் குல்தீப் 4 விக்கெட்களையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 34.5 ஓவரில் 2 விக்கெட் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனையடுத்து அடுத்து நடைபெற உள்ள 2 -ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் நியூஸிலாந்து உள்ளது.

நாளை(சனிக்கிழமை) இந்திய நேரப்படி காலை 7:30 மணியளவில் இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான 2 -ஆவது ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக நியூஸிலாந்து அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் பேட்டியளித்த நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன்  ‘இந்திய வீரர்கள் திறமையானவர்கள், அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எண்ணுகிறோம். அதைவிட எங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்’  என்று கூறியுள்ளார்.

Tags : #INDVNZ #KANEWILLIAMSON #ICC #ODI #TEAMINDIA