பாண்ட்யா மீண்டும் உள்ளே, ‘தல’ தோனி வெளியே.. காரணம் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 28, 2019 11:06 AM

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

MS Dhoni given rest from 3rd ODI against New Zealand

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டி மற்றும்  மவுன்ட் மாங்கனுயில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நியூஸிலாந்திற்கு எதிரான 3 -ஆவது ஒருநாள் போட்டி தற்போது மவுன்ட் மாங்கனுயில் நடைபெற்றுவருகிறது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்துவரும் நியூஸிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இந்த 3 -ஆவது ஒருநாள் போட்டியில் இருந்து தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி தன் மீதான பல விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி. மேலும் நியூஸிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். நியூஸிலாந்திற்கு எதிரான 2 -ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி  பெற்றதை விடவும், தோனி செய்த மின்னல் வேக ஸ்டெம்பிங்கே வைரலானது. இந்நிலையில் அவருக்கு 3வது ஒருநாள் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும்  நியூஸிலாந்திற்கு எதிரான இந்த 3 -ஆவது ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MSDHONI #PANDYA #ICC #INDVSNZ #BCCI #ODI #DINESHKARTHIK