‘டீமுக்கு என்ன தேவையோ, அத புரிஞ்சு ஆடுவாரு’.. இந்திய வீரர் குறித்து கோலி பெருமிதம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 29, 2019 06:35 PM

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியது குறித்து பேசியுள்ளார்.

happy to have hardik pandya back in TeamIndia,says captain virat kohli

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி உள்ளது.

அடுத்து நடைபெற உள்ள 2 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வரவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கோலிக்கு போதுமானதாக இருக்கும் என கிரிக்கெட் தேர்வு குழு கூறியிருந்தது.

மேலும் நியூஸிலாந்துக்கு எதிரான 3 -ஆவது ஒருநாள் போட்டியிலிருந்து தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் அந்தரத்தில் பறந்து பாண்ட்யா பிடித்த கேட்ச் இணையத்தை வைரலாக்கியதோடு அவர் மீதான சர்ச்சையையும் கொஞ்சம் மறக்க செய்தது.

இந்நிலையில் பாண்ட்யா அணிக்கு திரும்பியது குறித்து கோலி பேசியிருந்தார். அதில், பாண்ட்யா அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து ஆடக்கூடியவர் எனவும், அணியின் சமநிலைக்கு உதவக்கூடியவராகவும் இருப்பார் எனவும் பாண்ட்யா குறித்து கோலி கூறியிருந்தார்.

Tags : #VIRATKOHLI #PANDYA #ICC #BCCI #TEAMINDIA