''தல தோனியின் மாஸான சாதனையை''...சமன் செய்த இந்திய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 29, 2019 06:32 PM

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா,அதிக சிக்ஸ்ர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்து,தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Rohit Sharma Equals MS Dhoni\'s Stunning Record

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா,77 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார்.அதிரடியாக விளையாடிய அவர்,அந்த போட்டியில் 2 சிக்ஸ்ர்கள் அடித்து மூலம்,ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்காக அதிக சிக்ஸ்ர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.இதுவரை இந்திய அணியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருந்தார்.தற்போது ரோஹித் ஷர்மா அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

தோனி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 222 சிக்ஸ்ர்கள் அடித்துள்ளார்.ஆனால் அதில் 7 சிக்ஸ்ர்கள் ஆசிய XI அணிக்காக விளையாடும் போது அடித்தது.தற்போது 215 சிக்ஸர்களுடன் தோனியும் ரோஹித் ஷர்மாவும் முதலிடத்தில் உள்ளனர்.195 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் சச்சின் உள்ளார். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் உள்ளனர்.

Tags : #MSDHONI #CRICKET #ROHIT SHARMA