''என்னமா விளையாடுறான் பா''...19 வயசுல நான் கூட இப்படி விளையாடுனது இல்ல...கோலி ஓபன் டாக்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 28, 2019 09:44 PM

நியூஸிலாந்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.இதனால் கடும் உற்சாகத்தில் இருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய வீரர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Even Ten Per Cent Of That When I Was 19 Virat Kohli about Shubman Gill

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோலி ''தனித்துவமான திறன் உடைய இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வந்துள்ளார்கள். பிரித்வி ஷா தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்தி கொண்டார்.மேலும் ஷுப்மன் கில்லின் திறமையை கண்டு நான் மிகவும் வியந்து போனேன்.

ஷுப்மனின் வலைப்பயிற்சி ஆட்டத்தை காண்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.நான் கூட என்னுடைய 19 வயதில் இப்படி ஆடவில்லையே என்று நினைக்க வைத்தது அவரது ஆட்டம்.இது போன்ற தன்னம்பிக்கை தான் இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாக அமையும்.புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் மகிழ்ச்சியை விடவும் நிறைவடைகிறோம். அவர்கள் வளர்ச்சியடைய வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குகிறோம் என விராட் கோலி தெரிவித்தார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #SHUBMAN GILL