'ஆத்திரத்தில் பெண்ணின் துப்பட்டாவை இழுத்த முன்னாள் முதல்வர்'...விடாமல் சண்டையிட்ட பெண்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 28, 2019 07:56 PM

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான சித்தராமையா,மைசூருவில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது அங்கு பேசிய பெண் ஒருவர் சித்தராமையாவின் மகனும் எம்.எல்.ஏவுமான யாதிந்த்ராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை.தொகுதியில் உள்ள குறைகள் குறித்து கூட பேச முடியவில்லை என கோபமாக கூறினார்.

Siddaramaiah caught on camera misbehaving with woman in Karnataka

இதனை சற்றும் எதிர்பாராத சித்தராமையா கடும் ஆத்திரமடைந்தார்.உடனே பெண்ணின் கையிலிருந்து மைக்கை பிடுங்கினார்.அப்போது எதிர்பாராத விதமாக சித்தராமையாவின் கை, பெண்ணின் துப்பட்டாவையும் சேர்த்து இழுத்தது.இதனால் அந்த பெண் அணிந்திருந்த துப்பட்டா பாதி கீழே சரிந்தது.இருப்பினும் அந்த பெண் ஆவேசமாக சித்தராமையாவிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்.

பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அமர வைத்தார்கள்.மேலும் சித்தராமையாவின் செயலிற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.இந்த வீடியோ காட்சிகள்  சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.