'நீ ஏமாற்றுக்காரன்'...இந்திய வீரரை நோக்கி கத்திய ரசிகர்கள்...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 28, 2019 06:59 PM

தான் அவுட்டாகி விட்டேன் என தெரிந்தும் புஜாரா வெளியேறாமல் இருந்தது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Fans Call Pujara Cheater For Escaping Dismissal During Ranji Trophy

பெங்களூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் கர்நாடகா – சவுராஸ்திரா அணிகள் மோதின.இதில் சவுராஸ்திரா அணிக்காக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் புஜாரா விளையாடினார்.முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 275 ரன்கள் எடுத்தது.பின்பு களமிறங்கிய சவுராஸ்திரா அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 39 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாம் இன்னிங்ஸ் விளையாடிய கர்நாடகா, 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனிடையே 279 ரன்கல் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஸ்திரா, 91.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.இதன் இரண்டாம் இன்னிங்ஸில் விளையாடி கொண்டிருந்த புஜாரா,வினய் குமார் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை.புஜாராவும் அதனை கண்டுகொள்ளாமல் கிரீஸை விட்டு நகராமல் நின்றார்.

ரீப்ளேயில் பார்த்த போது பந்து புஜாராவின் பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது.ஆனால் புஜாரா அவுட் என தெரிந்தும் வெளியேறாமல் இருந்தது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை வரவழைத்தது.இதனால், புஜாராவை நோக்கி ஏமாற்றுகாரர் என ரசிகர்கள் கத்த தொடங்கினார்கள்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #CHETESHWAR PUJARA #RANJI TROPHY