'நாளைக்கு தோனி விளையாடுவாரா?...'தல ரசிகர்கள் வெய்டிங்'...நச்சுனு பதிலளித்த பயிற்சியாளர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 02, 2019 05:01 PM

நாளை  நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் தோனி இடம் பெறுவாரா என்பது குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பதில் அளித்துள்ளார்.

MS Dhoni to return from injury in fifth ODI - Sanjay Bangar

நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளை வென்று ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது.இதனிடையே வெலிங்டனில் நாளை 5வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியானது நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தசைபிடிப்பு காரணமாகக் கடந்த இரு போட்டிகளில் தோனி விளையாடவில்லை.இதனால் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் தோனி விளையாடுவாரா என,ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது குறித்து அணியின் துணைப்பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ''தோனியின்  உடல்நிலை நன்றாக தேறிவிட்டது.ஓய்வில் இருந்த அவர் பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆதலால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவார்.ஆனால் 11 வீரர்கள் கொண்ட இறுதி பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

Tags : #MSDHONI #BCCI #CRICKET #SANJAY BANGAR