''என் மேல கோபப்பட்டாரு ஆனால்...என்னா மனுஷன் யா இவரு''...தல தோனி குறித்து நெகிழ்ந்த வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 31, 2019 11:13 PM

இந்திய முன்னாள் கேப்டன் தோனி குறித்த எந்த சம்பவமும் வைரலாகி விடும்.தோனி குறித்த செய்திகளை அறிந்து கொள்வதில் அவரது ரசிகர்களுக்கு ஈடு யாருமே இல்லை என கூறலாம்.அந்த வகையில் தோனி மற்றும் கலீல் அகமது இடையேயான ப்ரோமேன்ஸ் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது.

Khaleel Ahmed And MS Dhoni\'s Bromance Breaks The Internet

தோனிக்கு மலர்கள் கொடுப்பது போன்ற  படத்தை பகிர்ந்து,அதில் யாருமே இவரைப்போல இல்லை என வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டியின் போது  கலீல் அகமதிடம் தோனி கோபப்பட்டது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கலீல் தோனி போன்ற மனிதரை காண்பது அரிது என தெரிவித்துள்ளார்.

இணையத்தில் ஹிட் அடித்து வரும் இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து,இது தோனி மற்றும் கலீல் அகமது இடையேயான ப்ரோமேன்ஸ் என பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #MSDHONI #CRICKET #TWITTER #KHALEEL AHMED