'இத செய்ங்க' முடி எப்புடி வளருதுன்னு பாருங்க.. வீடியோ வெளியிட்ட வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 30, 2019 06:37 PM

இந்திய அணியின் அதிரடி வீரர் ஷிகர் தவான் அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் வீடியோகளை ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம்.அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Shikhar Dhawan\'s Son Zoraver Discovers Solution For Receding Hairline

33 வயதான தவான் தனது மகன் ஸோராவெரை தோள்களில் சுமந்தவாறு விளையாடும் வகையில் அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.அதில் தவானின் மகன் அவரது தலையில் உப்பைக் கொட்டுகிறார்.உடனே தவான் தலையில் உப்பை கொட்டினால் முடி நன்றாக வளரும் என கிண்டலாக பதிலளிக்கிறார்.

சீரான பார்மில் இருக்கும் தவான் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 75 ரன்கள் குவித்தார்.இரண்டாவதாக நடந்த ஒரு நாள் போட்டியில்  66 ரன்கள் குவித்ததோடு,தவான், ரோஹித் கூட்டணி 154 ரன்கள் சேர்த்து அசத்தினார்கள்.

Tags : #CRICKET #TWITTER #SHIKHAR DHAWAN #ZORAVER