'ஐபோனில் இப்படி ஒரு ஆபத்தா'...கண்டுபிடித்த சிறுவன்...அதிர்ந்த ஆப்பிள் நிறுவனம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 30, 2019 09:26 PM

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் உள்ள  ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் இருந்த மிகப்பெரிய தவறை 14 வயது சிறுவன் ஒருவன் கண்டுபிடித்திருக்கிறான்.

14-Year-Old boy First Saw Bug In Apple FaceTime

அரிசோனாவில் உள்ள பள்ளி சிறுவனின் தயார் தனது மகனிடம் ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் பேசும் போது அனுமதி இல்லாத உரையாடலை கேட்டு அதிர்ச்சியடைத்ததாக தெரிவித்துள்ளார்.இதற்காக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் ''ஃபேஸ்டைமில் இருக்கும் இந்த குறையினை முதலில் எனது மகன் தான் கண்டு பிடித்தான்.இது சாதாரண விஷயம் அல்ல.மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

ஆப்பிளின் புதிய ஐ.ஓஎஸ்.ஸில் தான் இந்த குறையினை எனது மகன் கண்டுபிடித்தான்.அதனால்தான் மற்றவர்கள் அழைப்பை ஏற்பதற்கு முன்பே அடுத்தவரின் குரலை கேட்பதற்கு காரணம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.இதனால் ஆப்பிள் ஃபேஸ்டைமில் க்ரூப் காலிங் வசதியை ப்ளாக் செய்தது.

இது குறித்து பேசிய ஆப்பிளின் செய்தி தொடர்பாளர், "இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு இந்த வார இறுதிக்குள் புதிய அப்டேட் வரும்" என்று அறிவித்தார்.இந்நிலையில் ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்ஸே தனது ட்விட்டர் பதிவில் ''பிரச்னை  சரிசெய்யப்படும் வரை ஃபேஸ்டைமை  பயன்படுத்த வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஐபோனில் ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் ஒருவர் அழைக்கும் போது,மறுமுனையில் இருப்பவர் அழைப்பை ஏற்கும் முன்பே அவர்களால் மற்றவர் பேசுவதை கேட்க முடியும் என்ற தவறோடு லேட்டஸ்ட் அப்டேட் ஆப்பிள் போன்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags : #APPLE #TWITTER #IPHONE #FACETIME