‘தோனி இங்க என்ன பண்றாரு.. அப்ப கன்ஃபார்ம்’.. வைரல் ஃபோட்டோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 30, 2019 05:30 PM

இந்தியா- நியூஸிலாந்து இடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் தல தோனி களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dhoni practices TeamIndia\'s training session ahead of 4th ODI-NZvIND

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதனிடையே முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாண்ட பிறகு இந்திய அணி 3-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 வருடங்களுக்கு பிறகு நியூஸிலாந்து மண்ணில், ஒருநாள் போட்டிகளில் தொடரை கைப்பற்றி இந்தியா பெரும் சாதனை படைத்தது.

3-வது ஒருநாள் போட்டியின்போது அணியில் மீண்டும் சேர்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா பிடித்த கேட்ச் வைரலானது.  மேலும் அப்போட்டியில் தல தோனி தசைப் பிடிப்பு காரணமாக விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.  அதோடு, அடுத்து இருக்கும் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்படுவதால் துணைக் கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனவரி 31-ஆம் தேதி ஹாமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சிக் களத்தில் பேட்டிங் செய்து பயிற்சி செய்த புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில் தல தோனியும் பயிற்சி பெற்றுவரும் புகைப்படம் இடம் பெற்றிருப்பதால், 4-வது ஒருநாள் போட்டியில் தோனி விளையாடுவதை உறுதி செய்துகொண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனாலும் இப்போட்டியில் தோனி விளையாடுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல், பிசிசிஐ-யின் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #NZVIND #TEAMINDIA #4TH ODI #MSDHONI #BCCI