நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வந்து, மர்ம நபர்கள் செய்த பதறவைக்கும் காரியம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 30, 2019 04:32 PM

சென்னையில் பட்டாக்கத்தியுடன் வந்து இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

men came with Broadsword and stole two wheelers Viral CCTV footages

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே அஜித் என்பவர் நேற்று இரவு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணமல் போனதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அஜித் அளித்த புகாரை அடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இருசக்கர வாகனம் நிறுத்தபட்டிருந்த இடத்தில் சிசிடிவி கேமரா இருப்பதை அறிந்த காவல் துறையினர் அதனை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில், மூன்று நபர்கள் பட்டாகத்தியுடன் வந்து, இருசக்கர வாகனத்தைத் திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது பற்றி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : #CCTV #CHENNAI #MIDNIGHT #MEN #BIZARRE