‘இதுக்காகத்தான் செஞ்சேன்’.. மாடல் அழகியைக் கொன்ற ஃபோட்டோகிராபர் பரபரப்பு வாக்குமூலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 25, 2019 04:59 PM

மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மர்மமான முறையில் மும்பையின் முக்கியமான இடத்தில் கொல்லப்பட்டு பார்சல் செய்து வீசியெறிப்பட்டிருந்த மாடல் அழகியின் வழக்கில் திடீர் திருப்பமும் அதிரவைக்கும் உண்மைகளும் வெளிவந்துள்ளன.

Teen Photographer kills woman model after she refused his demand

சென்ற வருடம் அக்டோபர் மாதம் 20 வயது மதிக்கத்தக்க மும்பை மாடல் அழகி,19 வயது மதிக்கத்தக்க ஃபோட்டோகிராபரால் கொல்லப்பட்டுள்ளார் என்கிற உண்மை தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வின் உன்னதமான தருணம் ஒவ்வொன்றையும் பார்த்து ரசிக்கும் மூன்றாவது கண்கள் கேமராதான். அப்படிப்பட்ட ஒளிப்பதிவு கருவியை கையாளும் புகைப்படக்காரரால் ஒரு டிஜிட்டல் பிக்சர் மூலம் ஒரு கவிதையை, ஒரு கதையை சொல்ல முடியும். உலக ஜீவராசிகளின் இயக்கத்தில் முக்கியமான ஒரு நொடியை அப்படியே உறையவைக்க முடியும். அவரின் எண்ணம் எத்தகைய அழகாக இருக்க வேண்டும் என்பதாலேயே ஒரு புகைப்படக்காரர் மீது பலருக்கும் பெரும் மரியாதை உண்டாகும்.

அப்படித்தான் ஒளிப்பதிவாளர் சையது மூஸாமீல் மீது மான்சி தீக்‌ஷித் என்கிற 20 வயது மும்பை மாடல் அழகிக்கு உண்டானதும் அதே மரியாதைதான். ஆனால் 19 வயதான சையது மான்சியை பார்த்ததும் தன்னை பறிகொடுத்துள்ளார்.  பின்னர் மும்பை அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு போட்டோ ஷூட் செய்ய மான்சியை அவர் அழைத்துள்ளார். ஆனால் மான்சி வந்ததற்கு பிறகு சையது மான்சியை தகாத முறையில் அணுகியிருக்கிறார்.

அதற்கு உடன்படாத மான்சியின் மீது கோபம் கொண்ட சையது மர ஸ்டூலை எடுத்து மான்சியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். சில மாதங்கள் கடந்த பிறகு தற்போது சையது போலீஸிடம் தான் செய்ததை எல்லாம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். மும்பையில் சினிமா மற்றும் மாடல் துறையை நம்பி வரும் பல பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் மத்தியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MANSIDIXIT #PHOTOGRAPHER #MURDER #CRIME #BIZARRE