பள்ளிச் சிறுமிகள் நடனம்..மேடை ஏறி கான்ஸ்டபிள் செய்த காரியத்தால் சஸ்பெண்ட்..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 30, 2019 01:33 PM

நடனமாடிய பள்ளிச் சிறுமிகள் மீது பணத்தை வாரி இறைத்த போலீஸ் கான்ஸ்டபிளது செயல் இணையத்தில் வைரலாகி வருவதோடு அனைவரின் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

PC gets suspended after showers cash on school girls in cultural event

பப் என்றுச் சொல்லப்படும் மனமகிழ் மன்ற கலாச்சாரங்கள் வெளிநாடுகளில் மிக பிரபலம். இந்தியாவிலும் மிக சொற்பமாக ஆங்காங்கே அப்படியான பப் கலாச்சாரங்கள் இரவு நேரங்களில் இயங்கி வருகின்றன. இவற்றுள் நடனமாடும் பெண்கள் மீது பெரும் பணக்காரர்கள் பலர் பணத்தை வாரி இறைப்பது வழக்கம்.

ஆனால் அது அவ்வாறு கலைஞர்களை ஊக்குவிக்கும் வெகுமதியாக இல்லாமல், நடனமாடும் பெண்களை இழிவுபடுத்துகிற செயலாகவும், அவர்களின் சுயமரியாதையை தரக்குறைவுப்படுத்துவதாகவும் இருப்பதால் அதுபோன்ற செயல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது என்று மிக அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுவெளியில் இருந்து தனித்து நிழலுலகத்தில் மட்டும் இயங்கி வரும் பப் கலாச்சாரங்களிலேயே இப்படி பெண்கள் நடனமாடும்போது அவர்களின்மீது பணத்தை வாரி இறைக்கும் செயலானது உச்சநீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிச்சிறுமிகள் நடனமாடும் போது அந்த மேடையில் ஏறி அவர்களின் மீது பணத்தை வாரி இறைத்த கான்ஸ்டபிளின் செயல் கண்டிக்கப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நாண்ட் என்கிற ஊரின் அரசுப்பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியில் சிறுமிகள் நடனமாடிக் கொண்டிருந்தபோது, மேடை ஏறிய போலீஸ் கான்ஸ்டபிள் பணத்தை அந்த சிறுமிகள் மீது தூவுகிறார். உண்மையில் சிறுமிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் அவர் செய்ததாக கூறப்பட்டாலும், இந்த செயல் நாகரிகமற்றதாகக் கருதப்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags : #MAHARASHTRA #REPUBLIC DAY #NAGPUR #POLICE CONSTABLE #VIRALVIDEOS #BIZARRE