காதல் தோல்வியில் குடித்துவிட்டு, கலெக்டர் ஆபீஸ் வந்த நபரின் விநோத காரியம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 30, 2019 12:49 PM

மதுரையில் காதல் தோல்விக்கு வங்கிக்கடன் தரக்கோரி தீக்குளிக்க முயன்ற ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

TN - man threatens suicide demands 1 lakh loan for his love failure

தமிழில் ‘காதல்’ என்கிற திரைப்படத்தில் மெக்கானிக் முருகன் என்கிற கதாபாத்திரம் வரும், அந்த கதாபாத்திரம் இறுதியில் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கபட்டது போல் முடிவு பெற்றிருக்கும். அதேபோல உண்மையாகவே மதுரையில் மெக்கானிக் முருகன் எனபவர் தனது காதல் தோல்விக்காக விநோதமான ஒரு முடிவை எடுத்துள்ளார்.  

மதுரை ஆரப்பாளயத்தைச் சேர்ந்த மெக்கானிக் முருகன் என்பவர் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். உடனே உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த காவல் துறையினர் உடனே மெக்கானிக் முருகனை தடுத்து நிறுத்தி அவரின் மீது தண்ணீரை ஊற்றி காப்பற்றியுள்ளனர். பின்னர் மெக்கானிக் முருகனை கைது செய்து தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், முருகன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், அந்த காதல், தோல்வியில் முடிந்ததால், தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் காதல் தோல்விக்கு பிரதிபலனாக ரூ.1 லட்சம் வங்கி கடன் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

காதல் தோல்வி அடைந்ததால், மதுபோதையில் வந்து வங்கிக் கடன் கேட்ட சம்பவம்  நகைச்சுவையையும் அதற்காக அவர் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MADURAI #TAMILNADU