எச்.ஐ.வி ரத்தம் தவறுதலாக செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 17, 2019 08:43 PM

விருதுநகர் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

TN- HIV Blood Transfused woman gives birth to new girl baby

சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கர்ப்பிணி பெண்ணுக்கு, ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட எச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை தவறுதலாக மருத்துவ பணியாளர்கள் செலுத்திய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. 

இதனிடையே எச்ஐவி தொற்றுள்ள ரத்தத்துக்கு சொந்தக்கார இளைஞர் தாமாகவே முன்வந்து தனது ரத்தத்தை வழங்கவேண்டாம் என அறிவுறுத்த முயற்சித்து அது தோல்வியடைந்து, அதற்குள் இந்த பெண் தவறுதலாக பாதிக்கப்பட்டதால் குற்றவுணர்ச்சியில் எலிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அதிர்ச்சிப் பேரலையை உண்டுபண்ணியது. 

இத்தகைய பரபரப்பான விவகாரத்தின் அடுத்த படிநிலையாக சாத்தூரில் கர்ப்பிணியாக இருந்தபோது எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட அந்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தற்போது (ஜனவரி 17, 2019) பெண் குழந்தை பிறந்துள்ளது. 

அரசு மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த சம்பவம் விபத்தாக கருதப்பட்டு தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின்பு குறிப்பிட்ட மாதங்கள் வரை, தாய்க்கு இருக்கும் எச்ஐவி குழந்தைக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #HIVBLOODTRANSFUSED #SATTUR #MADURAI #RAJAJIHOSPITAL #GH #NEWBORNBABY