'தற்காலிக ஆசிரியர்களா?’.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.. ‘சம்பளம் எவ்ளோ தெரியுமா?’

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 25, 2019 12:09 PM

தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் கீழ் ஆசிரியர்களும் அரசுப்பள்ளி ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

directorate of school education orders to appoint temporary teachers

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஊழியர்கள் இணைந்து ஜாக்டோ ஜியோ சங்கக் கூட்டமைப்புகளின் கீழ் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடந்துகொண்டிருக்கும் ஆசிரியர் போராட்டம் தமிழ்நாடு முழுவதுமாக வலுக்கத் தொடங்கியது.

பின்னர் தனியார் பள்ளி சங்கக்கூட்டமைப்புகளும் தங்களுடைய ஆதரவினை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கும் பொருட்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் யாரும் தற்காலிகமாக அரசுப்பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும் ஆங்காங்கே உள்ள இளைஞர்கள் பலர், அரசுப் பள்ளிகளைத் திறந்து வைத்து ஆசிரியர்கள் வராததால், தாங்களே பாடங்களை எடுக்கத் தொடங்கினர்.

இதனிடையே ஆசிரியர்கள் அனைவரையும் 25-ஆம் தேதிக்குள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவினை சுட்டிக்காட்டிய பள்ளிக்கல்வித்துறை ஜனவரி 22-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய ஆசிரியர்கள் இன்றும் பள்ளிக்குத் திரும்பாததால், ரூ.7,500 சம்பளத்துக்கு தொகுப்பு ஒப்பந்த ஊதிய அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கச்சொல்லி பள்ளிகளுக்கு உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு 17-B விதியின் கீழ் நோட்டீஸ் அனுப்பச்சொல்லி முதன்மைக்கல்வி அலுவர்களுக்கு அறிவுறுத்திய பள்ளிக்கல்வித்துறை, தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு போராட்டக்காரர்கள் இடைஞ்சலாக இருந்தால் அவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், அது அரசின் வேலை என்றும் கூறியுள்ளது. 

Tags : #TNTEACHERSSTRIKE #TAMILNADU #JACTOGEO #TEACHERSPROTEST