'பசியில் வாடுபவர்கள் இருக்கும் தேசத்தில் கட்- அவுட்டுக்கு பால் ஊத்தணுமா?'.. கொந்தளித்த சீமான்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 24, 2019 08:37 PM

நாம் தமிழர் கட்சித் தலைவர்  சீமான் அவ்வப்போது நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் சமூகக் கேடுகளையும் விமர்சித்து ஆக்ரோஷமாகவும் லாஜிக்கல் சென்சுடனும் விமர்சித்து கேள்வி எழுப்புபவர்.

Politician Seeman angry speech on fans first show culture in theatres

இந்நிலையில் மிக அண்மையில் பெரிய நடிகர்களின் ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோவில் செய்யும் கலாச்சாரங்களை விமர்சித்து அனல் பறக்க பேசியுள்ளார்.

அதன்படி, ‘நள்ளிரவு 1 மணிக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரஜினி படம் பார்க்க வந்து நிற்கிறார்கள். என் சகோதரர் அஜித்தின் படத்தைப் பார்க்க விடியற் காலையில் 4 மணிக்கே என் இளைஞர்கள் வந்து நிற்கிறார்கள். ஆனால் இந்த மண்ணின் பிரச்சனையை பேசுவதற்கு இப்படி வரச்சொன்னால் அங்கு இந்த முனைப்பு இருப்பதில்லை’ என்று வருத்தப்பட்டு ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

மேலும் ‘பால் ஒரு புரதச்சத்துள்ள, எல்லோருக்கும் எளிதாக கிடைக்காத, பசியில் வாடும் பஞ்ச பதாகைகளுக்கு கிடைக்காத பொருளாக இருக்கும்பட்சத்தில், அண்டா அண்டாவாக எடுத்துக்கொண்டு போய் கட்-அவுட்டில் ஊற்றுவது என்பது ஒரு அறிவார்ந்த தமிழ் சமூகத்தின் இளைஞர் செய்யும் செயலா? வேறு தேசத்து மக்கள் இந்த இனத்தை எப்படி பார்ப்பார்கள்? ’ என்று பேசிய சீமான், ஆனால் தான் சொன்ன அறிக்கைக்காக தன் தம்பிகளான நடிகர்கள் சூர்யாவும், விஜய்யும் ரசிகர்கள் இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று அறிக்கை விட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அஜித்திடம், ‘நீங்கள் படத்தில் தலைக்கவசம் அணிந்து நடித்தால் அதை பார்க்கும் ரசிகர்கள் அணிகிறார்கள். அது போல் மற்ற விஷயங்களையும் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்.  உங்கள் ரசிகர் ஒருவர் ஆட்டை அறுத்து உங்கள் கட்-அவுட்டின் மீது ரத்தத்தால் அபிஷேகம் செய்ததை பார்த்திருப்பீர்கள். உங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று இன்னொரு முறை அழுத்தமாகச் சொல்லுங்கள்’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : #SEEMAN #FDFS #FANS #TAMILNADU #AJITH #VIJAY #SURYA