‘கண்ணில் படுற பொண்ணுங்கள சுடப்போறேன்’.. அலறவிட்ட இன்னொரு கிறிஸ்டோபர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 30, 2019 12:26 PM

பொது இடங்களில் தன் கண்களில் படும் பெண்களை எல்லாம் சுட்டுக்கொல்லப்போவதாக தனது பேஸ்புக்கில் பதிவு செய்த இளைஞரது செயல் பலரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

psycho gets arrested for threatening mass shoot on girls - Bizarre

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் வெய்ன் க்ளியரி என்கிற 27 வயது இளைஞர் ஒருவர்தான் இத்தகைய ஒரு பதிவினை தனது பேஸ்புக்கில் பதிவு செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

இதனை படித்த பலரும் பயந்து நடுங்கியுமுள்ளனர். உண்மையில் கிறிஸ்டோபர் இவ்வாறு தனது பேஸ்புக்கில் பதிவிட்டதற்கு என்ன காரணம்? இவர் சைகோவாக இருப்பாரோ என்கிற கேள்விகள் மக்களிடையே எழுந்ததோடு, அவரது வசிப்பிடத்தின் அருகே இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பேஸ்புக் வாசிகள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர்.

ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த இளைஞர், தான் அவ்வாறு கூறியதற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அதன்படி, 27 வயதான தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் யாருடனும் தான் இன்னும் கமிட் ஆகவில்லை என்றும் அதனால் கோபத்தின் உச்சத்தில் இருப்பதாக தெரிவித்தவர், இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, பொது இடங்களில் தன் கண்களில் படும் எல்லா பெண்களையும் துப்பாக்கி கொண்டு சுட்டுக் கொல்லவிருப்பதாக கூறினார். மேலும் இதற்கென, தான் தற்கொலை செய்ய விரும்பவில்லை என்றும், அந்த எண்ணமுடைய ஆண்கள் ஆபத்தானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டோபரின் இந்த 2வது பதிவினையும் படித்த பிறகு பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளான பலரும் கிறிஸ்டோபர் மீது போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். இதனை ஏற்ற போலீஸார் கிறிஸ்டோபரைத் தேடியுள்ளனர். பின்னர் ஒரு  உணவகம் ஒன்றில் வைத்து கைது செய்து விசாரித்துள்ளனர்.

அப்போதுதான் கிறிஸ்டோபர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் பெண்களுக்கு எதிரான பலவிதமான அதிர்ச்சியூட்டும் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. பேஸ்புக் மூலம் பலரையும் பயத்துக்குள்ளாக்கிய இதுபோன்ற மனிதர்களும் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதால் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : #PSYCHO #BIZARRE #FACEBOOK #ATTEMPTMURDER #WOMEN