ப்ரஷரில் உள்ள பெண்களுக்கு, ‘ஆண்கள் வாடகைக்கு’.. விநோத ஆப்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 27, 2019 02:57 PM

மன அழுத்தம் இருக்கும் பெண்கள் ஆண்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் விநோதமான வசதியுடைய ஆப் ஒன்றை மும்பையை சேர்ந்த ஒருவர் அறிமுகப்படுத்தியது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

women those who\'re in pressure can take men for rental

குஷால் பிரகாஷ் என்கிற மும்பையை சேர்ந்த இளைஞர் RABF -ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த ஆப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்களை இந்த ஆப்பின் மூலம் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அவர்களிடம் தங்களுடைய சோகங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்த ஆப்பை உருவாக்கியதற்கான நோக்கம் தனிமையிலோ அல்லது மன அழுத்தத்திலோ இருப்பவர்கள் மனம்விட்டு பேசவும் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் தங்களுக்கு பிடித்த துணையை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பிரச்சனை குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் பயன்படுத்துவதுதான். தவிர இந்த ஆப், டேட்டிங் போன்ற விஷியங்களுக்காக உருவாக்கப்படவில்லை என குஷால் பிரகாஷ் தெளிவாக கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்த ஆப்பில்  பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு டெஸ்ட்டுகள் வைத்து ஆண்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த ஆப்பின் மூலம் கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் ஆண்கள் பகுதி நேர வேலையாக இதை செய்துவருவதாகவும் கூறியுள்ளார்.

Tags : #INDIA #APP #PRESSURE #WOMEN