‘2-க்கும் மேல் குழந்தை பெற்றவர்களிடம் இருந்து இதையெல்லாம் பறிக்கணும்’: பாபா ராம்தேவ் அதிரடி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 24, 2019 03:24 PM

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களின் வாக்குரிமையை பறிக்கச் சொல்லி பாபா ராம் தேவ் கூறியுள்ள அதிரடியான கருத்து பலரிடம் வரவேற்பையும் சிலரின் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

pluck these rights from parents with more than 2 children, baba ramdev

உத்திர பிரதேசம் மாநிலத்தின் அலிகார் என்கிற பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற யோகாசன புகழ் பாபா ராம்தேவ், பெருகி வரும் மக்கள் தொகையை குறித்த தனது கவலையைத் தெரிவித்திருந்தார். அந்த வேதனையின் விளைவாக, ‘மக்கள் தொகை நாட்டில் பெருகிவருவதை குறைக்கும் நோக்கில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்’ என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,  அவ்வாறு இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்ற பெற்றோர்களுக்கு இந்திய அரசு, குடிமகன் என்கிற அடிப்படையில் வழங்கும் எவ்வித சலுகைகளையும், சிறப்பு சலுகைகளையும் வழங்கக் கூடாது என்று முழங்கியுள்ளார். ‘உதாரணமாக அந்த பெற்றொர்களுக்கு அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கான சலுகையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தினார்.

இதற்கு அடுத்த யோசனை இன்னும் அதிர வைத்தது. ஆம், இந்திய அரசுக்குட்பட்ட மருத்துவமனைகளை அந்த பெற்றோர்கள் பயன்படுத்த முடியாதபடி விதிமுறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசு வேலைகளையே அளிக்கக்கூடாது அல்லது அவர்களை அரசு வேலைகளில் அமர்த்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இம்மாதிரி சமூக அக்கறையின்றி இருக்கும் பெற்றோர்கள் இந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக தேர்தல்களில் நிற்பதற்கான அனுமதி அல்லது உரிமை மறுக்கப்பட வேண்டும் என்றும் இந்த கடுமையான விதிமுறைகளை இந்து முஸ்லீம் என்கிற பாகுபாடின்றி அமல்படுத்தினால் மக்கள் தொகை தானாகவேக் குறைந்துவிடும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார் பாபா ராம்தேவ்.

முன்னதாக, தன்னைப்போல திருமணவாழ்வைத் துறந்தவர்களுக்கு கூடுதலான மரியாதை வழங்க அரசிடம் பாபா ராம்தேவ் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #POPULATIONCONTROL #BABARAMDEV #INDIA #PARENTS