'திருமணத்தன்று பியூட்டி பார்லர் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்'.. பதறவைக்கும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 27, 2019 12:28 PM

திருமணத்திற்கு முன்பு மணப்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman abducted from outside a beauty parlour, CCTV goes viral

பஞ்சாப் மாநிலம் முக்‌ஷ்டார் நகரத்தில் அதிகாலை நேரம் மணப்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்காக மேக்கப் செய்துகொள்வதற்கு
பியூட்டி பார்லர் சென்றுகொண்டிருந்துள்ளார். இதனை நோட்டமிட்டபடி இரண்டு மர்ம நபர்கள் ஒரு காரில் பியூட்டி பார்லருக்கு வெளியே நின்றபடி, அந்த  பெண்ணுக்காக காத்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து பியூட்டி பார்லரில் மேக்கப் செய்துகொண்டிருந்த அப்பெண்ணை அந்த மர்ம நபர்கள் தூக்கிக்கொண்டு வந்து வழுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். அப்பெண் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்க முயன்று காரில் இருந்து கீழே விழுந்துள்ளார். ஆனாலும் கடத்தல்காரர்கள் அப்பெண்ணை காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இது பியூட்டி பார்லருக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் கடத்தல்கார்கள் அப்பெண்ணை ஒரு பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். தற்போது அப்பெண் காவல் நிலையத்தின் பாதுகாப்பில் உள்ளார். சிசிடிவி கேமராவை ஆதாரமாக வைத்து விசாரித்து வரும் காவல் துறையினர், தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களை தேடிவருகின்றனர். திருமணத்திற்கு முன்பு  மணப்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VIRALVIDEOS #CCTV #BRIDE #MARRIAGE #KIDNAP