நடுரோட்டில் கெத்’தாக ராம்ப் வாக் போடும் சிங்கங்கள்..பீதியில் வாகன ஒட்டிகள்..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 14, 2019 08:24 PM

தென் ஆப்ரிக்காவில் உள்ளது குருகெர் தேசிய பூங்கா. இந்த பூங்காவுக்கு அருகில் உள்ள சாலை ஒன்றில் நான்கைந்து சிங்கங்கள் ஒய்யாரமாக நடந்து வந்த காட்சிகள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

Lions of Kruger park and sabi sand walks in roadways viral video

அநேகமாக இந்த பக்கத்தில் உள்ள காடுகளில் இருந்து நீர்நிலைகளை தேடி அலைந்ததால் காட்டில் இருந்து நகர எல்லைகளுக்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படும் இந்த சிங்கங்களின் இயல்பான நடைபாதை இதுதான் இன்றும், பின்னாட்களில் உருவாக்கப்பட்ட பயண வழிச் சாலைகள், சிங்கங்களின் காட்டுவழிப்பாதைகளுக்கு இடையில் அமைந்துள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர்.

எனினும் மழை பொழிந்த தார்ச்சாலையில் பயணிகளின் கார்களுக்கு நடுவே, கெத்தாகவும் ஸ்டைலாகவும் ராம்ப் வாக் போல  நான்கு சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகள் அங்கு பயணித்த மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியதோடு, இந்த வீடியோ மில்லியன் கணக்காணோரால் பார்க்கப்பட்டதாலும் சுமார் 34 ஆயிரம் பேரால் பகிரப்பட்டதாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏறத்தாழ 30 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவை கார் ஓட்டிய ஒருவர் எடுத்ததாகவும், கம்பீரமாக நடந்து வந்த சிங்கங்களைப் பார்த்த வாகன ஓட்டிகள் பயந்துள்ளதாகவும் தெரிகிறது.

Tags : #LIONS #VIRALVIDEOS #SOUTHAFRICA #PASSENGERS #CARS #KRUGER PARK