முடிந்தது கடைசி தேதி.. பொங்கல் பரிசு ரூ. 1000 கிடைக்காதவங்களுக்கு இன்னொரு சான்ஸ்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 14, 2019 07:03 PM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு குடிமக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும், அட்டை ஒன்றுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முன்னதாக ஆளுநர் அறிவித்திருந்தார். அதன்படி, ஜனவரி 14-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு 1000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. 

TN - those who missed to get 1000 rs pongal gift can get it later

ஆனால் இடையிலேயே வந்த உயர்நீதிமன்ற அறிவிப்பின்படி, அனைவருக்கும் 1000 ரூபாயை தர வேண்டும் என்றால் தமிழக அதிமுக தலைமை, தங்களது கட்சி நிதியைத் தான் எடுத்து மக்களுக்கு தர வேண்டும் என்றும், அரசு பணத்தை மக்களுக்கு தருவதானால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மட்டும் 1000 ரூபாய் பொங்கல் பரிசினை வேண்டுமானால் வழங்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

தற்போது அந்த 1000 ரூபாய் பொங்கல் பரிசை வாங்குவதற்கான கடைசி நாள் முடிகிற நிலையில், பொங்கல் பரிசினை வாங்காமல், தவறவிட்டவர்கள் பின்னர் இன்னொரு தருணத்தில் மீண்டும் உரிய ஆவணங்களை காட்டி, அந்த 1000 ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளதாக மன்னார்குடியில் நடைபெற்ற, வாகன ஓட்டுனர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். 

Tags : #AIADMK #EDAPPADIKPALANISWAMI #PONGALGIFT #PONGAL2019