‘அரசியல் கிரவுண்ட் மட்டுமில்ல.. பேட்மிண்டனிலும் ரவுண்டு கட்டுவோம்ல’..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 05, 2019 10:41 PM
This Indian Women CM showing off her badminton skills goes Viral

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் கிரவுண்டில் மட்டும் அல்ல, பேட்மிண்டன் கிரவுண்டில் ரவுண்டு கட்டி விளையாடுவார் என்பதற்கு சான்றாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வாக இருக்கும்போது விளையாடுவதாக முன்னதாக பாராட்டினை பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2 நாள்களுக்கு முன்னர்தான் 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

 

இந்த நிலையில்தான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக பிர்பும் என்கிற ஊருக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்குள்ள பேட்மின்டன் கோர்ட்டில் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனை அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதேபோல் சில நாட்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறகுப்பந்து விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. 

Tags : #VIRALVIDEOS #BADMINTON #MAMTA BANERJEE #CHIEFMINISTER #WEST BENGAL