‘இப்படி ஒரு புத்திசாலி திருடனை, சிசிடிவி கூட பாத்திருக்காது’..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 29, 2019 05:14 PM

நீண்ட நேரம் கஷ்டப்பட்டு கல்லாப்பெட்டியை திருடிய திருடன் சிசிடிவி மூலம் பிடிபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு அவனது முட்டாள் தனத்தை பார்த்த பலரும் அவனை கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

thief caught on CCTV breaking a window, stealing an empty safe

அமெரிக்காவின் புளோரிடா நகரில் உள்ள டொமினோஸ் பீட்சா கடைக்கு நள்ளிரவு நேரம் ஒரு திருடன் திருடச் சென்றிருக்கிறான். கடை மூடிய அன்று இரவு 2 மணிக்குதான் திருடன் கடைக்குள் நுழைந்திருக்கிறான். இதனால் கடை மூடும் வரை காத்திருந்து, நள்ளிரவு 2 மணிக்கு புத்திசாலி தனமாக, தான் நுழைந்திருப்பதாக திருடன் கருதியுள்ளான்.

ஆனால் உள்ளே சென்ற திருடன் முதலில் தனக்கு இடைஞ்சலாக இருந்த கண்ணாடி கதவை உடைத்து உள்ளே செல்கிறான். முகத்தில் யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் முகமூடியும், கைவிரல்கள் எதிலும் பதிந்திடாமல் இருக்க கைகளில் உறைகளும் போட்டபடி முன்னெச்சரிக்கை முஸ்தீபுகளுடன் இருந்ததால், தான் ஒரு மூளைக்காரன்  என்று தன்னைக் கருதியிருக்கிறான் அந்த திருடன்.

அதன் பின்னர் பாய்வதற்காக பதுங்கும் புலியைப் போல் மெல்ல உள்ளேநுழையும் திருடன் அடுத்தடுத்த அறைகளை நோக்கிச் செல்வதை அடுத்தடுத்த அறைகளில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாத திருடன் சிசிடிவி கண்காணிப்பு அறை வரை சென்று சோதனை செய்துவிட்டு, மீண்டும் தத்தித் தாவியபடியே வந்து ஒரு பெரிய பெட்டியை உருவி எடுக்கிறான்.

அதுதான் கல்லாப்பெட்டி என்று தெரிந்து அதனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு அவசர அவசரமாக ஓடும் திருடனுக்கு அது காலி கல்லாப் பெட்டி என்று தெரியாமல் போனதைச்சொல்லி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த காலி பெட்டியை களவாடுவதற்கு 8 நிமிடம் போராடியதோடு, கண்ணாடிக் கதவை வேறு உடைத்துவிட்டு உள்ளே நுழைந்த இந்த திருடனை என்ன செய்யலாம் என்று திருடனை கைது செய்த பிறகு காவல்துறையே கண்கலங்கியிருக்கும் என்றும் பலர் கலாய்த்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட திருடன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags : #CCTV #VIRALVIDEOS #THIEF #SAFE