‘தல’ தோனி மாதிரி ஸ்டெம்பிங் செய்த கிரிக்கெட் வீரர்..வைரலான வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 01, 2019 05:33 PM

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனியை போல் ஆப்கானிஸ்தான் வீரர் எடுத்த விக்கெட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Watch:Shahzad tries to emulates MSDhoni on the pitch viral video

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3-1 என்கிற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வீரரான தோனி விக்கெட் கீப்பிங்கில் பல புதுமையான முறையில் விக்கெட்டுகளை எடுத்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். நடந்து முடிந்த நியூஸிலாந்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தோனி எடுத்த மின்னல் வேக ஸ்டெம்பிங் இணையத்தில் வைரலாகியது.

மேலும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போலவே வங்கதேசத்தில் பிரீமியர் லீக் (பிபிஎல்) என்கிற பெயரில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த புதன்கிழமை டாக்கா டைனமைட்ஸ் மற்றும் சிட்டாகாங் வைக்கிங் என்கிற இரு அணிகளுக்கு இடையேயான பிபிஎல் டி20 போட்டி நடைபெற்றது.

அப்போட்டியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் முகமது ஷசாத் தோனியைப் போல ஸ்டெம்பைப் பார்க்காமலேயே விக்கெட் எடுத்தது சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் முன்னதாக நடந்து முடிந்த பிபிஎல் டி20 போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் சார்பாக விளையாடிய தென் ஆப்ரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 50 பந்துகளில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ShahzadDhoniNoLook_edit_1 from whatdoyouneed on Vimeo.

Tags : #MSDHONI #STUMBING #BPL2019