’அதிவேக லாரி.. பசுவின் எதிர்பாராத திருப்பம்.. டிரைவரின் சமயோஜிதம்’.. பதறவைக்கும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 01, 2019 05:13 PM

பசு ஒன்றை காப்பாற்ற லாரி டிரைவர் தன் உயிரையே பணயம் வைத்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

Watch Video: Lorry gets nearly overturned and saves a cow goes viral

லாரி ஒன்று நெடுஞ்சாலையில் வந்த வேகத்திற்கு ஒரு பசுவை காப்பாற்றுவதற்காக முயன்றதில் நடந்த விபரீதம் வீடியோவாக வெளியாகியுள்ளது. பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் இந்த வீடியோவில் பசு ஒன்று சாலையை கடந்துகொண்டிருக்கிறது. 

நகரத்தில் கால்நடைகளுக்கு இருக்கும் இயல்பான பிரச்சனையாக, அங்கும் நெடுஞ்சாலை வழியே லாரி ஒன்று அதிக வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. லாரி கிட்டத்தில் வருவதைப் பார்த்ததும் மிரண்டுபோன பசு, தான் வந்த திசையில் அலறி அடித்துக்கொண்டு ஓட முயற்சித்துள்ளது. 

ஆனால் பசு சாலையைக் கடந்துவிட்டதாக எண்ணியிருந்த டிரைவருக்கு பசுவின் திருப்பம் எதிர்பாராததுதான். உடனே சமயோஜிதமாக செயல்பட்ட லாரி டிரைவர், லாரியை சட்டென தனக்கு இடதுபுறமாக 180 டிகிரிக்கு திருப்பியுள்ளார். இதனால் பசு தப்பித்தது.

அதே சமயம், பின்னால் இன்னொரு கனரக வாகனம் வந்திருந்தாலோ, கொஞ்சம் ஸ்லிப்பாகி இருந்தாலோ, தன் உயிர் போயிருக்கும் அளவுக்கு ஆபத்தான கட்டத்தில், ஒரு வாயில்லா ஜீவனை காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்த இந்த டிரைவரின் செயலை பலரும் இணையத்தில் பாராட்டி வருவதோடு, இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

Tags : #COW #DRIVER #LORRY #VIRALVIDEOS #PRESENCEOFMIND