‘ஸ்மிரிதி மந்தனாவுக்கு’ இப்படி ஒரு அங்கீகாரத்தை தந்த ஐசிசி..உற்சாகத்தில் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 03, 2019 11:44 AM

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு வீராங்கனையாக மலர்ந்திருப்பவர் ஸ்மிரிதி மந்தனா. இவர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்திருப்பது பலரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

mandhana smriti becomes the number one ranked batter in ODI, Says ICC

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது.

இதில் இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முறையே 105 மற்றும் 90 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் வெளியான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் நியூஸிலாந்துக்கு எதிராக சதமும் அரைசதமும் அடித்து முன்னேறிய ஸ்மிரிதி மந்தனா ஐசிசி தரவரிசையில் 3 புள்ளிகள் முன்னேறி 751 புள்ளிகளுடன் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

இதுவரை 47 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 4 சதங்களை ஸ்மிரிதி மந்தனா அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்திய அணியைச் சேர்ந்த மிதாலி ராஜ் இதே தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Tags : #ODI #CRICKET #MANDHANASMRITI #ICC #BCCI