‘5 சிக்ஸர் அடித்த சர்ச்சை வீரர்’.. 35 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 03, 2019 01:12 PM

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கும் நியூஸிலாந்துக்கும் நடந்து வரும் 5வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வெற்றி இலக்காக 253 ரன்கள்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

New Zealand vs India 5th ODI cricket match score update

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கோலி பங்கேற்காமல் ஓய்வெடுப்பதால், ரோஹித் ஷர்மா கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார்.

முன்னதாக 3-1 என்கிற கணக்கில், இந்தியா தொடரை கைப்பற்றியது. காயம் காரணமாக முந்தைய போட்டியில் விளையாடாத தோனி, 5வது போட்டியில் 1 ரன் எடுத்து அவுட் ஆகியுள்ளார். தவான் 6 ரன்களுக்கும் ரோஹித்  2 ரன்னிலும் ஆட்டமிழக்க 18 ரன்களில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது.

இந்த நிலையில்தான் களமிறங்கிய அம்பட்டி ராயுடு சிக்ஸர், பவுண்டரிகளை பறக்க விட்டு 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போல் பாண்ட்யா ஒரே ஒவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 22 பந்துகளுக்கு 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 45 ரன்கள் எடுத்தார்.  பின்னர் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை இந்திய அணி எடுத்த நிலையில், நியூஸிலாந்து அணி அடுத்து பேட்டிங் செய்தது. 

பின்னர் நியூஸிலாந்து அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களில் வீழ்ச்சியடைந்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

Tags : #MSDHONI #AMBATIRAYUDU #PANDYA #ICC #BCCI #ODI #NZVIND