‘3 வயது குழந்தையை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்’.. மிரளவைக்கும் காரணம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 01, 2019 12:12 PM

கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்ததாகக் கருதி பெற்றெடுத்த பிஞ்சு குழந்தைக்கு விஷ ஊசி போட்டு தாய் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பலரிடையே பெரும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது.

TN Mother kills her own baby 3 years old for this reason goes bizarre

கள்ளக்காதல் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல என்று கடந்த வருடம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கு தடையாக இருந்த சில சட்டப்பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. கள்ளக்காதலுக்கு தடையாக இருப்பதாக எண்ணி ஆணோ, பெண்ணோ செய்யும் கிரிமினல் குற்றங்களை தடுக்கும் வகையில் இத்தகைய சட்டங்கள் தளர்த்தப்பட்டன.

கள்ளக்காதல் செய்பவர்கள் தங்கள் குடும்ப சூழல்களை காரணங்களாக்கி, குழந்தைகளை கொலை செய்வது போன்ற தேவையற்ற இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய முடிவுகள் சட்டரீதியாக எடுக்கப்பட்டன. ஆனாலும் வேலூர் மாவட்டம் அருகே உள்ள நாட்றம்பள்ளியில் அக்ரஹாரத்தான் வட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்னும் செவிலியர், சரவணன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு 4 ஆண்டுகள் வாழ்ந்ததில் இந்த தம்பதியருக்கு விரோஷன் என்கிற 3  வயது ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் கணவருடனான தகராறு காரணமாக கடந்த 2 வருடங்களாக சந்தியா தனது அம்மா வீட்டில் தன் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில்தான் சந்தியாவுக்கு வேறொருவருடன் கள்ளக்காதல் உண்டாகியுள்ளது. ஆனால் சந்தியாவின் குழந்தை, தங்களது வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருந்ததால், அந்த குழந்தையை கொன்றுவிடும்படி சந்தியாவின் காதலர் கூறியதை அடுத்து, சந்தியா தன் குழந்தைக்கு விஷ ஊசி போட்டு கொன்றுள்ளார். 

தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்காக ஏதுமறியா பச்சிளம் குழந்தையைக் கொன்ற சந்தியாவை போலீஸார் தங்கள் கஸ்டடியில் விசாரித்து வருகின்றனர். கடந்த வருடம் அபிராமி என்பவர் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த தனது குழந்தைகளை கொன்ற சம்பவம் பலரையும் உலுக்கியது குறிப்பிடத்தக்கது. 

Tags : #AFFAIR #MURDER #CRIME #BABY #BIZARRE