அம்மா வீட்டுக்கு போயிட்டு, 10 நிமிஷம் லேட்டா வந்த மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 31, 2019 07:00 PM

மனைவி 10 நிமிடம் தாமதமாக வந்ததால், மனைவியை விவாகரத்து செய்த கணவரின் செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

man says triple talaq to wife after she coming late by 10 mins-bizarre

உத்தர பிரதேசத்தில் ஈட்டா என்கிற ஊரில்தான் இத்தகைய கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. மனைவி 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை எற்படுத்தியதோடு, மனைவியின் மீது ஆணாதிக்கம் செய்து பெண் சுதந்திரத்தை ஒடுக்கும் மனோபாவம் கொண்டவராக இருப்பதாக அந்த கணவர் மீது பலரும் விமர்சனங்களை செய்து வருகின்றன.

ஈட்டாவில் தன் கணவருடன் வசித்துவந்த முஸ்லீம் பெண், திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆன நிலையில், தனது அம்மா வீட்டுக்கு சென்று வருவதாகச் சொல்லி கூறிவிட்டுச் சென்றுள்ளார். உண்மையில் தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால்தான் அந்த பெண் தன் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால் கணவரோ மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக 30 நிமிடத்துக்குள் வரவேண்டும் என்று ஆணித்தரமாக கூறி அனுப்பியுள்ளார். ஆனால் போன இடத்தில் கொஞ்சம் கால தாமதமாகிவிட்டது. அதனால் அந்த பெண் தன் கணவரது வீட்டிற்கு வருவதற்கு 10 நிமிடங்கள் தாமதம் ஆகிவிட்டது. இதனை அடுத்து மனைவியின் சகோதரருக்கு போன் செய்த கணவர் தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கான முத்தலாக் சொல்லியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன் கணவரின் செயல் மீது அதிருப்தி அடைந்ததோடு, மிகவும் ஏழ்மையான தனக்கு அவர் இத்தகைய கொடுமையை தந்திருப்பது முறையல்ல என்றும், தான் வெறும் 10 நிமிடம்தான் தாமதாக வந்ததாகவும் கூறியுள்ளார். அதோடு, தன் கணவர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் அதனால் இந்த வாய்பை பயன்படுத்தி தலாக் செய்துள்ளதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். அப்பெண் அளித்த புகாரை எடுத்துக்கொண்ட காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். 

முன்னதாக லோக்சபாவில் மட்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட திருமண பாதுகாப்புரிமை மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு நிறைவேற்றப்பட்டிருந்தால், இப்படி முறையற்ற முறையில் தலாக் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்றும், ஆனால் அந்த மசோதா நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : #WIFE #BIZARRE #TALAQ #UTTERPRADESH