வெறும் 2 ரூபாய்க்காக நடந்த கொலை.. பாண்டிச்சேரியில் பரபரப்பு சம்பவம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 30, 2019 08:00 PM

புதுச்சேரியில் இரண்டு ரூபாய் கடனுக்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Drunken man dead after assaulting by another man with Brick

புதுச்சேரி மாநிலத்தில்  நல்லவாடு என்கிற கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க முத்தாள்ராயன் என்பவர் வசித்துவந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த தரணி என்பவருடன் முத்தாள்ராயன் ஒரு மதுக்கடையில் மது அருந்தியுள்ளார்.

பின்னர் மதுக்கடைக்கு அருகில் இருக்கும் பெட்டிக்கடைக்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது அக்கடைக்கு அருகே இருந்த வாலிபருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிதடி சண்டை வரை சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அருகிலிருந்த செங்கல்லால் முத்தாள்ராயனைத் தாக்கியுள்ளார். இதனால் முத்தாள்ராயன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முத்தாள்ராயனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முத்தாள்ராயனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செங்கல்லால் அடித்தவர் அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பது தெரியவந்தது. இதனையடுத்து மணியை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், மதுக்கடைக்கு அருகே இருந்த பெட்டிக்கடை மணி என்பவரின் உறவினருடையது என்பதும், அக்கடையில் சைட்-டிஷ் வாங்கி சாப்பிட்டுவிட்டு 2 ரூபாய் பாக்கி வைத்திருந்திருந்த முத்தாள்ராயன் மற்றும் தரணியிடம் கடைக்காரரின் சார்பாக, மணி அந்த 2 ரூபாய் பாக்கியை கேட்டதும் தெரியவந்துள்ளது. 

இதனால் ஆத்திரடமடைந்த முத்தாள்ராயனும், தரணியும் மதுபோதையில் கடைக்காரரின் உறவினரான மணியை செங்கல்லால் தாக்கியுள்ளனர். அதனால் மணி, மீண்டும் செங்கல்லால் திருப்பி முத்தாள்ராயனை தாக்கியதாகவும், முத்தாள்ராயனை கொலை செய்யும் எண்ணத்தில், தான் தாக்கவில்லை எனவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags : #MURDER #PUDUCHERRY #BIZARRE #DRUNK