‘நான் ஒண்ணும் தோற்றத்தில் அழகு குறைந்தவள் அல்ல.. வளர்ச்சி பிடிக்காதோரின் செயல் அது!’

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 30, 2019 07:37 PM

தான் ஒன்றும் தோற்றத்தில் அழகு குறைந்தவர் அல்ல என்று தன்னை வைத்து கேலி செய்பவர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ள பாசிட்டிவான பதிலை பலரும் வரவேற்று வருகின்றனர்.

Tamilisai Soundararajan Condemns on her cartoon published by A media

ஊடகம் ஒன்று, தன்னை கேலி செய்து வெளியிட்ட சித்திரம் தன் கட்சி சார்ந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் அதிருப்தி அளித்ததாகவும், அதிலும் அரசியலில் தன்னைப் போல் ஈடுபடும் எந்த பெண்ணையும் இப்படி கேலி செய்வதில்லை, தன்னை மட்டும்தான் இவ்வாறு சித்திரம் வரைந்து கேலி செய்வதாக, தன் நண்பர் ஒருவர் அறிவுறுத்தியதாகவும் தமிழக பாஜக மாநில செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் தனது நிறம், உருவம் முதலான காரணிகளை வைத்து கேலி செய்யும் வக்கிரமான மனநிலையை விமர்சித்துள்ள தமிழிசை, இன்னொரு நாளிதழில் தன்னை ‘மீம்ஸ் சூப்பர் ஸ்டார்’ என்று சொல்லியிருப்பது குறித்தும் தனது வேதனையை பகிர்ந்துகொண்டதோடு, தான் அரசியலில் வளர்ந்துவருவது பிடிக்காமலும், பெண்கள் அரசியலுக்கு வருவது பிடிக்காமலும் பலர் இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அரசியலில் பலம் பொருந்திய பின்னணியில் இருந்து வந்த தனக்கே இந்த நிலைமை என்றால் புதிதாக உள்நுழையும் பெண்களின் நிலை என்னவாகும் என்பது குறித்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். தனது குடும்பத்தாரும் இவற்றால் வருத்தப்படுவதாகக் கூறிய தமிழிசை, தைரியமிருந்தால் தன் திறமை மற்றும் பணியில் இருக்கும் குறைகளை விமர்சியுங்கள் என்றும், உருவத்தை வைத்து கேலி செய்யும் அளவுக்கு தான் ஒன்றும் தோற்றத்தில் அழகு குறைந்தவர் அல்ல என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.

Tags : #TAMILISAISOUNDARARAJAN #CARTOON #MEDIA #POLITICS #TAMILNADU